இளமையாக இருக்க ரஜினி சொன்ன வழி.. தர்பார் படத்துக்கு யூ/ஏ சான்று..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். நயன்தாரா கதாநாயகி. இப்படத்தின் டீஸர், டிரெய்லர், ஆடியோவுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினிக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் இப்படத்தில் சும்மா கிழி என்ற பாடல் பாடியிருக்கிறார். இதன் வீடியோ வெளியானது. அதில் ரஜினி இளமை பூரிப்புடன் விறுவிறுப்பாக நடனம் ஆடியிக்கிறார். அதைக்கண்டு இவ்வளவு இளமையாக ரஜினி இருப்பது எப்படி என்று கேட்டுள்ளனர்.
இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த்,' எந்த வயதிலும் இளமையாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கு வழி இருக்கிறது. அதற்கு ஒரு சிலவற்றை கண்டிப்பாக குறைத்துக்கொள்ள வேண்டும். ஆசை, கவலை, உணவு, தூக்கம் மற்றும் பேச்சு ஆகியவற்றை குறைத்துக் கொண்டால் கண்டிப்பாக எனர்ஜியாக, நிம்மதியாக வாழ முடியும் என அசத்தலான டிப்ஸ் கொடுத்தார்.
தர்பார் படத்துக்கு தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படம் முழுமையாக 159 நிமிடம் அதாவது 2 மணி 39 நிமிடம் 28 நொடி திரையில் ஓடும். வரும் 9ம்தேதி படம் ரிலீஸ் ஆகிறது.