தளபதி 64 கொரியா படத்தின் தழுவலா? விஜய் படத்துக்கு மீண்டும் சர்ச்சை..

கார்த்தி நடித்த கைதி படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். விஜய் நடித்த கத்தி முதல் அட்லி இயக்கிய பிகில் படம் வரை காப்பி அடிக்கப்பட்ட கதை என்று வம்பு வழக்கு தொடர்ந்து வருகிறது.

மாஸ்டர் படம் தொடங்கியதிலிருந்து அப்படியொரு பிரச்னை இல்லாமலிருந்த நிலையில் தற்போது புதிய சர்ச்சை கிளப்பி உள்ளது. மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் நடக்கும் பாலியல் தொல்லையை மையமாக வைத்து ”சிலின்ஸ்டு” என்ற பெயரில் கொரிய நாட்டு படம் ஒன்று வெளியாகி வெற்றி பெற்றது. அதில் நடித்த ஹீரோ பாலியல் தொல்லை கொடுத்த அரசியல்வாதி உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளை பழிக்குபழி வாங்குவதாக நடித்திருந்தார். அந்த கதையை தழுவித்தான் மாஸ்டர் கதை அமைக்கப்பட்டிருப்பதாக நெட்டில் தகவல்களும் புகைப்படங்களும் வந்த வண்ண மிருக்கிறது.

மாஸ்டர் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள மாற்று திறனாளிகள் பள்ளியில் நடந்தது. அதை வைத்துத்தான் இப்படத்தை கொரிய பட தழுவல் என்று புகைச்சல் கிளம்பியிருக்கிறது. ஆனால் இதற்கு இயக்குனர் தரப்பிலிருந்து எந்த பதிலும் தரப்படவில்லை.

மாஸ்டர் படத்தில் சில காட்சிகளில் விஜய் மீசை, தாடி மழித்து நடிக்க உள்ளார் என்ற தகவலும் பரவி வருகிறது. தளபதி 64 பட பூஜை போட்டது முதல் அப்படத்தின் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தகவல்கள் வைரலாகி வருகிறது.

More News >>