அமெரிக்க படையே வெளியேறு! ஈரானோடு கைகோர்த்த ஈராக்-விழிபிதுங்கி நிற்கும் டிரம்ப்.

ஈராக்கின் பாக்தாத் நகரிலுள்ள அமெரிக்காவின் தூதரகம் மீது நடத்தப்பட்ட ஏவுகணைதாக்குதலால் ஈராக் அமெரிக்காவின் படைகளை உடனே வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்க வான்வெளி தாக்குதலில் ஈரானின் நாயகனாக மட்டுமல்லாது வளைகுடாநாடுகளுக்கும் ஹீரோவாக விளங்கிய சொலெய்மணி கொல்லப்பட்டதோடு அவரை தீவிரவாதியாகவும் சித்தரித்த அமெரிக்காவின் செயல் கண்டு மற்ற உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சார்பாக வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரானின் செயலரிடம் பேசியதோடு மட்டுமல்லாது அமெரிக்காவிடவும் தங்கள் கவலையை பதிவு செய்துள்ளார்.இந்நிலையில் ஈராக்கின் பாக்தாத் நகரிலுள்ள அமெரிக்காவின் தூதரகம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலால் சுதாரித்து கொண்ட ஈரான் அவசர அவசரமாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

தீர்மானம் என்னவெனில் பாதுகாப்பிற்காக அமெரிக்கா அனுப்பிவைத்ததிருந்த ஐயாயிரத்து இருநூறு வீரர்களையும் ஈராக்கை விட்டு உடனே வெளியேற ஈராக் நாடாளுமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதே நேரம் ஈரானும் அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து முழுவதுமாக வெளியேறியது.இவ்விரண்டு சம்பவங்களும் ஒருசேர அறங்கேறியிருப்பது அமெரிக்காவிற்கு புதிய தலைவலியை கொண்டுவந்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈராக்கின் முடிவிற்கு கணடனம் தெரிவித்ததோடு ஈராக் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார் .இதற்கெல்லாம் பயப்படாமல் ஈரானும் ஈராக்கும் கைகோர்க்கும் பட்சத்தில் ஈராக்கிலிருக்கும் அமெரிக்க படைகள் தாயகத்திற்கு திரும்புவதே புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும்.திரும்பாமல் இங்கிருந்து ஈரானை எதிர்த்து சண்டையிடுவோம் என்றால் மூன்றாம் உலகப்போரை யாரும் தடுக்க முடியாது .

More News >>