காஷ்மீரில் தாக்குதல்! தீவிரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் இன்று(ஜன.7) அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் ெகால்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு, யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எனினும், எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அவ்வப்போது ஊடுருவ முயற்சித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் அந்த ஊடுருவல் முயற்்சிகளை உடனுக்குடன் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.காஷ்மீர் புலவாமா மாவட்டத்தில் அவந்திப்புரா பகுதியில் தீவிரவாதிகள்

பதுங்கியிருந்ததை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, தீவிரவாதிகளை பிடிக்க முயன்ற போது கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ஒரு தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார். மேலும் அந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

More News >>