அமெரிக்கா ஈரானிடையே ட்விட்டர் போர் ! வார்த்தை போர் மட்டுமே

மூன்றாம் உலகப்போர் வருமோ இல்லையோ ஈரான் மற்றும் அமெரிக்க அதிபர்கள் ட்விட்டர் போரை ஆரம்பித்துள்ளனர்.

ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி அமெரிக்க படையால் படுகொலை செய்யப்பட்ட பின்பு, ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல் மற்றும் அமெரிக்க அதிபரின் தலைக்கு விலை என உலக நாடுகளை அசச்சுறுத்தும் விதமாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில்,இரு நாட்டு அதிபர்களும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் மிரட்டிக்கொள்கின்றனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதிவில் தங்கள் நாட்டு வீரர்கள் ஐம்பத்திரெண்டு பேர் ஈரானால் பிடிக்கப்பட்டதை நினைவு கூர்ந்து ,அமெரிக்கா இதுபோன்ற சம்பவங்களுக்கு அமெரிக்கா உடனே பதிலடி கொடுக்கும் எனவும் ஈரானிலுள்ள 52 இடங்களை இலக்காக வைத்துள்ளதாகவும் கர்ஜித்துள்ளார்.

 

இதற்கு பதிலளித்துள்ள ஈரான் நாட்டு அதிபர் ஹாசன் ரௌஹானி ஐம்பத்திரெண்டு பேரை மட்டும் நினைவு கொள்ளாமல் 1988-ல் அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்ட IR655 விமானத்தில் பயணம் செய்த இருநூற்று தொண்ணூறு ஈரானியரை நினைவு கொள்ளுங்கள் என்று அமெரிக்காவின் விஷம செயலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

 

நாடுகளுக்கிடையே ஏற்படும் பகைமை நாட்டு மக்களையும் வீரர்களையும் எப்படியெல்லாம் பாதிப்புக்ககுள்ளாக்குகிறது.

 

 

More News >>