ஆணவக் கொலை ஆதரவு படத்துக்கு தடை? போலீஸில் புகார் மனு..
ஆணவக்கொலைக்கு எதிராக பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு படங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்நிலையில் ஆணவக் கொலைக்கு ஆதரவாக திரவுபதி என்ற படம் உருவாகியிருப்பதாகவும் அதற்கு தடை விதிக்க கேட்டும் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராம கிருஷ்ணன் என்பவர் சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அதில்,'கடந்த 2-ந் தேதி திரவுபதிபடத்தின் முன்னோட்டம் யூடியூப் மற்றும் சமூக வலை தளங்களில் வெளியானது. இந்த திரைப்படத் தை மோகன் என்பவர் இயக்கியுள்ளார். மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக சாதி மறுப்பு திருமணங்கள் அனைத்துமே நாடக காதலாக நடக்கிறது. சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஆணவப்படுகொலை செய்வதை ஒரு வேலையாகவே செய்ய வேண்டும் என்று வசனங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் மட்டும் தமிழகத் தில் 90-க்கும் மேற்பட்ட ஆணவக்கொலைகள் நடைபெற்றுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கிற்கு ஊறு விளைவிக்கும் பெரும் பிரச்சினையாக ஆணவப்படுகொலை கடந்த சில ஆண்டுகளாக மாறியுள்ள நிலையில், ஆணவப்படுகொலைகளை நியாயப்படுத்தி ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என அதில் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.