குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மும்பையில் அமைதி பேரணி.. சரத்பவார், யஷ்வந்த்சின்கா பங்கேற்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மும்பையில் அமைதி பேரணி நடந்தது. இதில் சரத்பவார், யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது முதல் அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிவசேனா கட்சி, நாடாளுமன்றத்தில் அந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்தாலும், அதற்கு பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. தற்ேபாது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவில் ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் கேட்வே ஆப் இந்தியா பகுதியில் காந்தி சாந்தி யாத்ரா என்ற பெயரில்் அமைதி பேரணி நடத்தப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் வரவிருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் ஆகியவற்றை எதிர்த்து இந்த பேரணி நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்கா மற்றும் பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

More News >>