விஜய்யின் மாஸ்டர் படம் 100 கோடி லாபம்.. ஷூட்டிங் முடியும் முன்பே பரபர விற்பனை..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடந்து வருகிறது. விஜய், விஜய்சேதபதி நடிக்கும் காட்சிகள் படமாகி வருகிறது.
படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே இப்படத்தின் வியாபாரம் முடிந்திருக்கிறதாம். இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லலித் பெற்றுள்ளார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உரிமைகளின் வியாபாரமும் முடிந்திருக்கிறதாம். இதுதவிர சன்டிவி சேட்டிலைட் உரிமை, அமேசான் டிஜிட்டல் உரிமம், வெளிநாட்டு ரிலீஸ் உரிமையையும் விற்பனையாகி விட்டது. மொத்த வியாபாரம் முடிவடைந்து ரூபாய் 100 கோடி லாபம் கிடைத்துள்ளதாக கோலிவுட்டில பேச்சு எழுந்துள்ளது.
மாஸ்டர் படத்தின் பட்ஜெட் சுமார் 150 கோடி என கூறப்படும் நிலையில் அதன் வியாபாரம் தற்போது 250 கோடிக்கு ஆகியிருக்கிறதாம்.