தர்பாரில் லாஜிக் மீறல் ஐஏஎஸ் அதிகாரி.. டிவிட்டால் பரபர..
ரஜினி நடித்த தர்பார் கடந்த 9ம் தேதி திரைக்கு வந்தது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர் களில் படம் வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக் கின்றன. படத்தின் முதல்பகுதி நன்றாக இருக்கிறது.
இடைவேளைக்கு பிறகு சரியில்லை என விமர்சிக்கப்படுகிறது. அதேசமயம் இப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக வெளியிட் டுள்ளது. இந்நிலையில் 2006ம் ஆண்டு ஐஏஎஸ் முடித்த நெல்லையை சேர்ந்தவர் அலெக்ஸ் பால் மேனன். தற்பொழுது சாட்டிஸ்கரில் பணியாற்றி வருகிறார். தர்பார் பற்றி ஒரு டிவிட் வெளியிட் டுள்ளார். அதில்,ஐயா, டேய் தமிழ் இயக்குனர் களா …இனிமே இந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பின்புலம் வச்சி எந்த படமும் எடுக்காதீங்க ஐயா. உங்க லாஜிக் ஓட்டைல எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது என பதிவிட்டிருக்கிறார்.
நாலு நாள்ள தலைவன ஃபிட்னஸ் நிரூபிக்க வச்சது தான்யா மிகப் பெரிய ஹூமன் ரைட் வைலேஷன் என மற்றொரு டிவிட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.