விந்து தானம் செய்யும் படத்தில் இளம் நடிகர்.. கடவுளை இழிவுபடுத்தியதாக போஸ்டர் சர்ச்சை?
குழந்தை பேறு இல்லாதவர்கள் செயற்கை கருவுதல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள பல்வேறு செயற்கை குழந்தை கருத்தரிப்பு மருத்துவமனைகள் பெரிய நகரங்களில செயல் பட்டு வருகிறது. இதன் பின்னணியில் உருவாகிறது தாராள பிரபு என்ற படம். இந்தியில் நடிகர் ஜான் ஆப்ரகாம் தயாரித்த விக்கி டோனர் என்ற படமே தமிழில் இந்த பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தியில் ஆயூஷ்மான குரானா, யா1111மி கவுதம் ஜோடியாக நடித்திருந்தனர்.
தமிழில் உருவாகும் தாராள பிரபு படத்தில் ஹரிஷ் கல்யாண், தான்யா நடிக்கின்றனர். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு செயற்கை கருவுற்றல் மூலமாக குழந்தை பிறக்க செய்யும் மருத்துவம னைகளுக்கு திடகாத்திரமான ஆண்களிடமிருந்து ஆண் விந்துக்கள் தானமாக பெறப்படும் முறை உள்ளது. அதுபோல் இப்படத்தில் குழந்தை பேறு தேவைப்படும் ஒரு பெண்ணுக்கு ஹரிஷ் கல்யாணை விந்து தானம் செய்விக்க முயற்சி நடக்கிறது. அதன்பிறகு அவர் சந்திக்கும் பிரச்னை களை காமெடியாக விளக்குகிறது. ஏ.எல்.விஜய், வானம் பட இயக்குனர் கிருஷ் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார்.
அவர் கூறும்போது,'விக்கி டோனர் படத்தின் ரீமேக் உரிமை பெற்று தமிழில் உருவாகிறது தாராள பிரபு. இந்தியில் இது அடல்ட் காமெடியாக உருவானது. தமிழில் அப்படியில்லாமல் எல்லோரும் பார்க்கும் கதையாக மாற்றி அமைக் கப்பட்டிருக்கிறது. ஹரிஷ் கல்யாண், தான்யாவுடன் விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது' என்றார்.
இந்நிலையில் தாராள பிரபு படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்து கடவுள்போல் ஹரிஷ் கல்யாண் மூன்று தலைகளுடன் தாமரை மலர் மீது அமர்ந்து நான்கு கைகளிலும் குழந்தைகளை பிடித்திருப்பதுபோல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சிலர் இந்துக்கள் மனதை புண்படுத்தும்படி போஸ்டர் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.