விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பது ஏன்? கடன் பிரச்னை காரணமா?
பீட்ஸாவில் விஜய்சேதுபதியின் ஹீரோ மார்கெட் சூடுபிடிக்க தொடங்கி தொடர்ந்து சேதுபதி, நடுவுல கொஞ்சம் பக்கத் காணோம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவே நடித்து வருகிறார்
தற்போது கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் ஆகிய படங்களிலும் ஹீரோவாக நடிக்கிறார். அதேசமயம் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டோர். அதேபோல் மலையாளத்தில் மார்கோரி மத்தாய் படத்தில் வில்லனாக நடித்தவர் தற்போது விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடிக்கி றார். தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த சை ரா நரசிம்ம ரெட்டி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிக்கும் அல வைகுந்தபுரம்லோ என்ற படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இந்தியில் ஆமிர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற படத்திலும் விஜய் சேதுபதி வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார்.
வில்லனாக நடித்து இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார் ரஜினிகாந்த். ஹீரோவாக ஆனபிறகு வில்லன் வேடம் ஏற்பதை தவிர்த்தார். அப்படியே வில்லனாக நடித்தாலும் தனது படத்திலேயே இரட்டை வேடத்தில் ஒரு கதாபாத்திரமாக அந்த வில்லன் வேடத்தை அமைத்துக்கொண்டார். சரத்குமார், சத்யராஜ் போன்றவர்களும் வில்லனாக நடித்த பின்னர் ஹீரோவாக மாறிய பிறகு மீண்டும் வில்லன் வேடத்தை ஏற்க மறுத்துவிட்டனர். ஆனால் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் போதே வில்லன் வேடங்களையும் ஏற்று நடித்து வருவது பலருக்கு புதிராக உள்ளது. அவர் பாலிசி பார்க்காமல் கதைபிடித்திருந்தால் அதில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் என்று கூறப்பட்டாலும் சொந்த படம் எடுத்தும், சிலருக்கு உதவி செய்யச் சென்றும் கோடிகளில் கடனில் சிக்கியிருக்கிறார். அதிலிருந்து மீள்வதற்காகவே வில்லன் வேடங் களை ஒப்புக்கொள்வதாக கோலிவுட்டில் சிலர் கூறுகின்றனர்.