11 விருதை தட்டி வருமா ஜோக்கர்.. ஆஸ்கர் கொண்டாட்டம் தொடக்கம்..
உலக அளவில் பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா வரும் பிப்ரவரி 9ம் தேதி நடக்க உள்ளது.
92வது ஆஸ்கர் போட்டி பட்டியலில் பல்வேறு படங்கள் தோள் தட்டி களம் இறங்கி உள்ளது. ஜாக்குயின் பீனிக்ஸ் நடித்திருக்கும் 'ஜோக்கர்' படம் 11 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து தி ஐரிஷமேன், குவான்டின் தரன்டினோ, ஒன்ஸ் அப்பான் ஏ டைம், வேர்ல்டு வார் ஒன் டேல், 1971 ஆகிய படங்களில் 4 விருதுகளுக்கான பரிந்துரைகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளன. இதுதவிர மேலும் பல்வேறுபடங்கள் போட்டி களத்தில் உள்ளது.
மேலும் ஜோஜோ ராப்பிட், பாராசைட் 'மேரேஜ் ஸ்டோரி' போன்ற படங்கள் சிறந்த நடிகை, மற்றும சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கான போட்டியில் பங்கெடுத்திருக்கின்றன.