சரக்கு ரயில் மீது மோதி புவனேஸ்வர் ரயில் தடம் புரண்டது.40 பேர் காயம்.
மும்பையில் இருந்து புவனேஸ்வருக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி தடம்புரண்டது. இதில், 40 பேர் காயமடைந்தனர்.
மும்பையில் இருந்து புவனேஸ்வருக்கு லோக்மான்ய திலக் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று(ஜன.16) அதிகாலை 7 மணியளவில் தடம்புரண்டது. ஒடிசா மாநிலம் சலாகான் அருகே சரக்கு ரயில் கார்டு கோச் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. உடனடியாக, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கியது.இந்த விபத்தில் சுமார் 40 பேர் வரை காயமடைந்தனர். அவர்களில் 7 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, இந்த வழியாக செல்ல வேண்டிய 7 ரயில்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.
இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.