நடிகை பிரியா பவானியுடன் காதலா? கடுப்பான எஸ்.ஜே.சூர்யா ..
திரைப்பட இயக்குனராக இருந்து நடிகரான அமீர்போல் பட இயக்குனராக இருந்து நடிகர் ஆனவர் எஸ்.ஜே.சூர்யா. அஜீத் நடித்த வாலி, நியூ, விஜய் நடித்த குஷி போன்ற ஹிட் படங்களை இயக்கிய இவர் ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார். ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மான்ஸ்டர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் எஸ்.ஜே.சூர்யா. அதில் அவருக்கு ஜோடியாக பிரியாபவானி சங்கர் நடித்திருந்தார். இதையடுத்து பொம்மை படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஜோடியாக நடிக்கின்றனர்.
இந்நிலையில் பிரியாவிடம் சூர்யா தனது காதலை வெளிப்படுத்தினாராம். ஆனால் வயது வித்தியாசம் அதிகம் இருப்பதால் எஸ்.ஜே.சூர்யா காதலை அவர் ஏற்க மறுத்துவிட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவியது. இதையறிந்து கோபம் அடைந்தார் எஸ்.ஜே. சூர்யா. காதல் கிசுகிசுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டரில் மெசேஜ் வெளியிட்டார் எஸ்.ஜே.சூர்யா. அதில் 'இது வதந்தி தான், இவை முட்டாள் யாரோ செய்த வேலை, அவர் என்னுடைய தோழி மட்டுமே' என தெரிவித்திருக்கிறார்.