குஜராத்தில் பயங்கர விபத்து: 8 பேர் பரிதாப பலி
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஜீப்புடன் லாரி வேகமாக மோதியதில் அதில் பயணித்து வந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் சபர்கந்திக் கொண்டு ஜீப் ஒன்று இதார் என்ற இடத்திற்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, குந்த்லா என்ற கிராமத்தின் அருகே ஜீப் வந்து கொண்டிருக்கும்போது எதிரே வந்த லாரி மீது ஜீப் வேகமாக மோதியது.
இதில், ஜீப் லாரியின் அடியில் சிக்கி நசுங்கியது. இந்த கோர விபத்தில் ஜீப்பில் இருந்த 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்காண காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.