நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல் படமாகிறது.. நானும் சிங்கிள்தான் இயக்குனர் அதிரடி..
நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர். அடிக்கடி வெளிநாடு செல்கின்றனர். இந்நிலையில் அவர்களின் காதலை சொல்லும் படமாக நானும் சிங்கிள்தான் என்ற படம் உருவாகிறது.
இதில் தினேஷ் ஹீரோ. தீப்தி திவேஸ் ஹீரோயின். இதில் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு டேவிட் ஆனந்த்ராஜ். இசை ஹித்தேஷ் மஞ்சுநாத் ( இவர் A.R.ரகுமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்). ஜெயகுமார், புன்னகை பூ கீதா தயாரிக்கின்றனர். கோபி இயக்குகிறார்.
இப்படம்பற்றி இயக்குனர் கூறும்போது,' சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக் கிறது. அதன் அடிப்படையிலேயே" நானும் சிங்கிள் தான் " என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப் பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி பலர் ஆசீர்வதிக்கும் ஜோடி யாக இருந்தாலும் இப்போதுவரை சிலரால் ஆச்சர்யமாக பார்க்கும் ஜோடியும் கூட. இந்த படத்தின் ஹீரோ லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திரு மணம் செய்ய வேண்டும் என்பதுதான். அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ தினேஷ் வருகிறார். அவருக்கு நயன்தாராபோல் பெண் கிடைத்ததா என்பது கதை' என்றார் கோபி.