திருவள்ளுவர் மகானை வணங்கி மோடி ட்விட்..

திருவள்ளுவர் மகானை வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி தமிழில் ட்விட் போட்டிருக்கிறார்.

திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டிருக்கிறார். அதன் விவரம்:திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும் இலக்கியப் படைப்புக்களும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன. சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக்கின்றன.

இவ்வாறு பிரதமர் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவில் திருவள்ளுவரின் படத்தை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம், சமீபத்தில் தமிழ்நாடு பாஜக இணையதளத்தில், திருவள்ளுவருக்கு நெற்றியில் பட்டை போட்டு, காவி உடையில் இருப்பது போல் ஒரு படத்தை வெளியிட்டனர். அதற்கு திராவிட இயக்கங்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த படத்தை இன்று காலையில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதற்கும் எதிர்ப்பு கிளம்பவே அவர், திருவள்ளுவர் வெள்ளை உடையில் இருக்கும் அதிகாரப்பூர்வ படத்தை மாற்றினார்.

இந்த சூழலில்தான், பிரதமர் மோடி, திருவள்ளுவரின் படமே இல்லாமல் ட்விட் செய்திருக்கிறார்.

More News >>