ஹைட்ரோ கார்பனுக்கு நோ.. அமைச்சரவை முடிவெடுக்க ஸ்டாலின் வேண்டுகோள்..

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று அமைச்சரவை முடிவெடுக்க வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வுப் பணி நடத்த, வேதாந்தா குழுமத்திற்கும், ஓ.என்.ஜி.சி.க்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய நிலையில், தற்போது 5வது ஹைட்ரோ கார்பன் த்ிட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும், மக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அரசாணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசின் இந்த அரசாணைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் இந்த திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று அரசு கொள்கை முடிெவடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:சட்டமன்றத்தில் அரசு உறுதியளித்தபடி, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவு எடுத்து, காவிரி டெல்டா பகுதிகளை சகாரா பாலைவனமாக்கும் சதிச் செயலை தடுத்திட அதிமுக அரசு முன்வருமா? இவ்வாறு அவர் கேட்டிருக்கிறார்.

More News >>