ஆப்கனில் எல்லோருமே துன்புறுத்தலில் சிக்கியவர்கள்.. முன்னாள் அதிபர் பேட்டி

ஆப்கனிஸ்தானில் முஸ்லிம்கள் உள்பட எல்லோருமே துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள்தான் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் கூறியுள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. அதாவது, அந்நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சட்டம், முஸ்லிம்களை மட்டும் புறக்கணித்து சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாக கூறி, நாடு முழுவதும் ஆங்காங்கே ேபாராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஆப்கனிஸ்தான் நாட்டு முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

எங்கள் நாட்டில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினர் என்று யாரும் கிடையாது. ஏனெனில், தொடர்ச்சியான உள்நாட்டு போர் காரணமாக முஸ்லிம்கள் உள்பட எல்லா மதத்தினருமே துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள்தான். இந்தியாவில் எதற்காக குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்தார்கள் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு குறிப்பிட்ட காரணங்கள் ஏதாவது இருக்கலாம். அது பற்றி கருத்து சொல்ல முடியாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More News >>