ஜெயலலிதா பிறந்தநாளா... நினைவு நாளா? - அதிமுக நிர்வாகிகளின் அட்டகாசம்
ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை நினைவு தினமாக மாற்றி கொண்டாடியதால் அரியலூரில் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா பிறந்த நாளை நினைவு நாளாகக் கொண்டாடிய ஜெயங்கொண்டம் அ.தி.மு.க-வினர். இந்தச் செயலால் அரியலூர் அ.தி.மு.க-வில் பல்வேறு பிரச்னைகள் நிலவிவருகிறது.
அதிமுக நிர்வாகிகள் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள். அந்த வகையில் அரியலூர் மாவட்டம் சார்பாக கொறடா தாமரை ராஜேந்திரன் உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில், ஆனால், ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவுக்கென்று ஃப்ளெக்ஸ் பேனரை வைக்காமல், முதலாம் ஆண்டு நினைவு தின ஃப்ளெக்ஸ் பேனரை வைத்து மாலை அணிவித்து பத்திரிகைகளுக்குப் பேட்டியும் கொடுத்தனர்.
பின்பு அதனை கண்டுகொண்ட ஒருவர், ‘அம்மா பிறந்த நாளா, இல்லை இறந்த நாளா' என்று கேட்க அனைவரும் பதறிப்போயுள்ளனர். ஒரு முன்னாள் முதல்வரின் பிறந்த நாளை அவரது கட்சிக்காரர்களே மாற்றி கொண்டாடியது அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.