இதுவல்லவோ நட்பு...- சிலிர்க்க வைக்கும் தவான்-கோலி நட்பு!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவானும், களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ‘மாமன் - மச்சான்’ போல் பழகி வருபவர்கள்.
இருவரும் பரஸ்பரம் குடும்பத்துடன் சந்திப்பதும், ஒருவரைப் பற்றி இன்னொருவர் சிலாகிப்பதும் என மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விராட் கோலி தவானுக்கு மசாஜ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட மிக நீண்டத் தொடரை சில நாள்களுக்கு முன்னர் விளையாடி முடித்தது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியது.
மூன்றாவது டி20 போட்டியில், கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக விலகினார். அப்போது, பெவிலியனிலிருந்த கோலி அணி வீரர்களுக்கு பார்வையாளராக இருந்த உற்சாகமூட்டினார். தவான் போட்டியில் விளையாடி முடித்து சோர்வாக வந்து உட்கார, அவரது ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க ஹெட்-மசாஜ் கொடுத்துள்ளார் கோலி. இது செம வைரலாகி வருகிறது.