இது சீனாவா? வடகொரியாவா?- சீன அதிபரைக் காய்ச்சியெடுக்கும் நெட்டிசன்கள்

சீன அதிபருக்கு எதிரான விமர்சனங்கள் சீனாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் எழுந்து வருகிறது.

சீனாவில் அதிபர் ஜீ ஜின்பிங் அதிபராகப் பதவி வகித்து வருகிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகக் கடந்த 2013-ம் ஆண்டு அதிபராக அறிமுகமானவர் ஜின்பிங்.

சீனாவில் இரண்டு ஐந்தாண்டுகளே ஒரு வேட்பாளரால் சீன அதிபர் பதவியில் நீடிக்க முடியும். ஆனால், சீனாவில் தற்போது இந்த விதிமுறையை நீக்கும் முயற்சியில் அதிபர் ஜின்பிங் ஈடுபட்டுள்ளார்.

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த ராஜ்யமும் ஒருவரின் கையிலேயே குவியும்போது அது சர்வாதிகரத்துக்கே வழிவகுக்கும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், சீனாவிலும் அதிபரின் இந்தப் புதிய ஆலோசனைக்கு சீனாவிலும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. சர்வதேச விமர்சகர்கள் 'இது சீனாவா இல்லை வடகொரியாவா?' எனக் கொந்தளித்து வருகின்றனர்.

More News >>