சித்தராமையாவைப் பார்த்து மோடி கற்றுக்கொள்ள வேண்டும்- தேர்தல் ஆவேசத்தில் ராகுல்
“வாக்குறிதிகளை நிறைவேற்றுவது குறித்து முதல்வர் சித்தராமையாவைப் பார்த்து மோடி கற்றுக்கொள்ள வேண்டும்” என கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கர்நாடகாவில் வருகிற ஏப்ரல்- மே மாதங்களில் பொதுத் தேர்தல் வரவுள்ளது. இதையடுத்து ஆளும் காங்கிரஸ் கட்சி கர்நாடகா மாநிலம் முழுவதும் சூறவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
'ஜன ஆசிர்வாத யாத்ரா' என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 'மக்களிடம் தேர்தலுக்காக ஆசி பெற வருகிறேன்' என கர்நாடகா முழுவதும் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "காங்கிரஸ் கட்சியே கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். இதுவரையில் மக்களுக்காகக் கொடுத்த அத்தனை வாக்குறிகளையும் காங்கிரஸ் தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ளது.
மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்டு செயலாற்றியுள்ளார் முதல்வர் சித்தராமையா. மக்களுக்காகக் கொடுத்த வாக்குறிதிகளை நிறைவேற்றுவது குறித்து சித்தராமையாவைப் பார்த்துப் பிரதமர் மோடி கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.