டூயல் சிம் உடன் ஐ-போன்: களத்தில் ஆப்பிள் நிறுவனம்

மொத்தமாக மூன்று அதிரடி ஐ-போன் அறிமுகங்கள் மூலம் 2018-ம் ஆண்டில் கலக்கக் காத்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் என்பது பலரின் கனவாகவும் லட்சியமாகவுமே இருக்கும். அளவான உயரம், அதிகப்படியான டெக்னாலஜி என ராக்கெட் விலையில் விற்கும் ஐ-போன்களை பல அதிரடி புதுமைகள் மூலம் 'அனைவருக்குமான் ஐ-போன்' என சாத்தியமாக்க முடிவு செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

இந்த வகையில் 2018-ம் ஆண்டில் மூன்று புதிய மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது ஆப்பிள். தற்போதுள்ள ஐ-போன் எக்ஸ் வடிவத்திலேயே புதிய டெக்னாலஜிகளைப் பொருத்தி இரண்டு சிம் கார்டு வைத்துக்கொள்ளும் வசதியுடன் ஒரு போன், 6.5 இன்ச் அளவு கொண்ட மிகப்பெரிய ஐ-போன், மற்றும் விலை குறைவான மாடர்ன் ஐ-போன் என மூன்று புதிய மாடல்களை சந்தையில் களமிற்க்குகிறது ஐ-போன்.

More News >>