வெண்ணிலா கபடி குழு இயக்குனர் மீது வாகனம் மோதல்.. மருத்துவமனையில் லேசர் அறுவை சிகிச்சை..
விஷ்ணு விஷால் அறிமுகமான, 'வெண்ணிலா கபடி குழு' படத்தை இயக்கியவர் சுசீந்திரன், தொடர்ந்து நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, கென்னடி கிளப். சேம்பியன் போன்ற படங்களை இயக்கியுள் ளார். தனது அடுத்த படத்திற்கான பணியில் சுசீந்திரன் ஈடுபட்டுள்ளார்.
வழக்கமாக காலையில் சுசீந்திரன் நடை பயிற்சிக்கு செல்வார். நேற்று காலை நடைப யிற்சி சென்றபோது அவர் மீது ஒரு வாகனம் எதிர்பாரதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்தார். அவரது கை எலும்பில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்த சில வாரங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.