தமன்னாவை ஆன்மிகம், சைவத்துக்கு மாற்றிய புத்தகங்கள்.. அவரே வெளியிட்ட தகவல்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மாறி நடித்து வந்த தமன்னாவுக்கு இப்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. தமிழில் அவருக்கு கைவசம் படங்கள் எதுவும் இல்லை. கடைசியாக அவர் விஷால் ஜோடியாக ஆக்‌ஷன் படத்தில் நடித்தார். தற்போது 2 தெலுங்கு படங்களில் நடிக்கிறார். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டது குறித்தும், சைவ உணவுக்கு மாறியது குறித்தும் தமன்னா தெரிவித்தார்.

அவர் கூறும்போது,' ஒஷோவின் உண்மை யான பெயர் என்று புத்தகத்தை படித்தபிறதான் எனக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. ரோரி ப்ரீட் மற்றும் கிம் பர்னூ எழுதிய ஸ்கின்னி பிட்ச் புத்தகத்தை பிடித்த பின்தான் அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தி விட்டு சைவத்துக்கு மாறினேன். இந்த இரண்டு புத்தகங்களும் என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது' என தெரிவித்தார்.

More News >>