`நாங்க ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றுவோம்! - வெஸ்ட் இண்டீஸின் அதீத நம்பிக்கை

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி நிர்வாகத்துக்கும் அதன் முன்னணி விளையாட்டு வீரர்களுக்கும் பிரச்னை, மாறிக் கொண்டே இருக்கும் கேப்டன் பதவி, ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வீரர்கள் என்று வெஸ்ட் இண்டீஸுக்கு கிரிக்கெட்டில் எப்போதும் பிரச்னைதான். முதல் இரண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கிரிக்கெட் உலகத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய மேற்கிந்தியத் தீவுகள், 2019-ம் ஆண்டு நடக்கவுள்ள ஒருநாள் உலக் கோப்பைக்கு இன்னும் தகுதி பெறாத நிலையில் உள்ளது. தகுதிச் சுற்றில், நெதர்லாண்டு, ஐயர்லாண்டு, ஆப்கானிஸ்தான் போன்ற இரண்டாம் தர அணிகளுடன் தற்போது மேற்கிந்தியத் தீவுகள் மோதி வெற்றி பெற்றுதான் அடுத்த ஆண்டு உலகக் கோப்பையிலேயே கலந்து கொள்ள முடியும். இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன், `அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்று, அதில் வெற்றியும் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று கூறி அதிச்சியூட்டியுள்ளார்.

அவர் மேலும், `நாங்கள் ஒருநாள் போட்டிகளில் அந்தளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை என்று ஒப்புக் கொள்கிறேன். அதே வேளையில், டி20 போட்டிகளில் நாங்கள் கலக்கி வருகிறோம். குறிப்பாக, 2016-ம் ஆண்டு நடந்த ஆண்கள் மற்றும் பெண்கள் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றினோம். அதே போன்றதொரு ஆட்டத்தை அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஒருநாள் உலகக் கோப்பையிலும் வெளிப்படுத்தி மீண்டும் கோப்பை எங்கள் வசமாக்குவோம்’ என்று கூறியுள்ளார். அடுத்த வருடம் நடக்க உள்ள உலகக் கோப்பையை ஜெயிப்பது இருக்கட்டும் பாஸ், முதல்ல தகுதிச் சுற்றைத் தாண்டுங்கள்.

More News >>