ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? - சுப்பிரமணிய சாமி அதிர்ச்சி தகவல்
ஸ்ரீதேவி மரணம் கொலையாக இருக்கலாம் என்றும், முழுமையான தகவல்கள் கிடைத்தே பிறகு உறுதி செய்ய முடியும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணமடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் தடவியல் அறிக்கையில் அவர் குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. பிறகு அவரது தலையில் அடிபட்டதற்கான காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி அளித்துள்ள பேட்டியில், “அரசு தரப்பு தகவல்களுக்கு நாம் காத்திருப்போம். ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உறுதியானதாக இல்லை. அவர் அதிகளவு மது எடுத்துக்கொள்ள மாட்டார் என்றால் எப்படி அவரது உடலில் மது கலந்தது. சிசிடிவி கேமரா பதிவுகள் என்னாச்சு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஸ்ரீதேவி மரணம் கொலையாக இருக்கலாம் என்றும், முழுமையான தகவல்கள் கிடைத்தே பிறகு உறுதி செய்ய முடியும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.