போதி தர்மராகும் பார்த்திபன்.. கொரோனா வைரஸுக்கு நாட்டு மருந்து பட்டியல்..
சூர்யா நடித்த 7ம் அறிவு படத்தின் மைய கருவே சீனாவில் பரவும் நோயை நம்மூர் யோகி போதி தர்மர் கட்டுப்படுத்தி குணப்படுத்துவார். அப்படத்தில் போதி தர்மராக சூர்யா நடித்திருந்தார். தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளனர். இதுபற்றி நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் சில பதிவுகள் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து தனக்கு வந்த வாட்ஸ் அப் மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் செய்திருக்கும் அவர் தமிழிலும்… என்ற தலைப்போடு தமிழர்களின் பாரம்பரிய மருந்துகள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
7ம் அறிவு படத்தில் சூர்யா போதிதர்மர் வேடம் போட்டதுபோல் தற்போது இணைய தளம் வழியாக நடிகர் பார்த்திபன் கொரானா வைரஸுக்கு மருந்து சொல்லி டிஜிட்டல் போதி தர்மராகியிருக்கிறார்.