வடிவேலுபோல் காமெடி செய்த பிரியா பவானி.. துபாய் அட்ரஸ் தந்தார்..
நடிகை பிரியா பவானி சங்கர் படங்களில் பிரபலம் ஆவதைவிட கிசுகிசுவிலும், அவரே வெளியிட்ட சுவாரஸ்யமான கல்லூரி காதலன் பற்றிய தகவலிலும் அதிமாக பிரபலமாகி வருகிறார்.
எஸ்.ஜே.சூர்யாவின் காதலை ஏற்க மறுத்ததாக இவரைப்பற்றி சில தினங்களுக்கு முன்தகவல் வந்த நிலையில் தன்னுடைய கல்லூரி காதல்பற்றி பிரியாவே இணைய தள பக்கத்தில் மெசேஜ் பகிர்ந்து காதலன் படத்துடன் தனது படத்தையும் வெளியிட்டார்.'மேயாத மான்' படத்தின் மூலம் அறிமுகமான பிரியா பவானி, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது மாஃபியா, குருதி ஆட்டம், 'இந்தியன் 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாயில் இருப்பதாக ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார் பிரியா பவானி சங்கர். அதில் தான் இருக்கும் அட்ரஸ் இதுதான் என்பதை கூறி விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச் சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய் என குறிப்பிட்டு கலாட்டா செய்திருக்கிறார். ஒரு படத்தில் பார்த்திபன், வடிவேலு நடித்த காமெடி துபாய்க்கு சென்றதும் பிரியா பவானிக்கு ஞபாகம் வர அதை அப்படியே டிவிட் செய்துவிட்டார் பிரியா பவானி.