மகளிர் கிரிக்கெட் கேப்டன் ஆன டாப்ஸி.. கடுமையான பயிற்சிக்கு பின் ஷூட்டிங்..
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார் மிதாலி ராஜ். கடந்த 15 வருடமாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வரும் மிதாலி பல்வேறு சாதனைகள் புரிந்திருப்பதுடன் கடினமான தருணங்களை பலமுறை எதிர்கொண்டிருக்கிறார்.
அவரது வாழ்க்கை திரைப்படமாகிறது. 'சபாஷ் மிது' என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ராகுல் தோலாகியா இயக்குகிறார். மிதாலி ராஜாக நடிகை டாப்ஸி நடிக்கிறார்.
கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கும் டாப்ஸி அதற்காக தீவிரமாக கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார். சொல்லப்போனால் நிஜ கிரிக்கெட் வீராராகவே மாறியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. மிதாலி ராஜ் கெட்டப்பில் டாப்ஸி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படத்தில் அவரது தோற்றம் எப்படியிருக்கும் என்பதை பர்ஸ்ட்லுக் வெளியிட்டதன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது படக்குழு. இப்படம் அடுத்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தி, ஆங்கிலத்தில் தவிர தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இப்படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.