காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் தர்ணா..

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். நாளை, மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றம் கூடுவதற்க்கு முன்பாக காலை 10.30 மணிக்கு எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே நடந்த இந்த தர்ணாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.குடியுரிமை திருத்தச் சட்டம், மக்கள் தொகை பதிேவடு, குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்தும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் அவர்கள் கோஷம் எழுப்பினர். சுமார் 20 நிமிடங்கள் தர்ணா நடத்திய பின்பு, நாடாளுமன்றத்திற்குள் சென்றனர்.

More News >>