தனுஷ் நடிக்கும் 3வது இந்தி படம்.. பிரபல நடிகர் மகள் ஜோடி..
வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தையடுத்து பட்டாசு படத்தில் நடித்தார் தனுஷ். இதையடுத்து சுருளி, கர்ணன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த் எல்.ராய் இயக்கும் புதிய இந்தி படததில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இதில் தனுஷ் ஜோடியாக சாரா அலிகான் நடிக்கிறார். இவர் பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மகள் ஆவார். அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆனந்த் எல் ராய் இயக்கிய ராஞ்சனா படம் மூலம்தான் இந்தியில் அறிமுகமானார் தனுஷ் தற்போது மிண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கிறார்.
சாரா அலிகானுக்கு தனுஷ், அக்ஷய்குமார் முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு படம் பற்றி அறிவித்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் எல்.ராய். வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 2021ம் ஆண்டு பிப்ரவரியில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே ஷமிதாப் என்ற இந்தி படத்திலும் தனுஷ் நடித்திருந்தார். இப்படத்தை பால்கி இயக்கினார். இதில் தனுஷுக்கு ஜோடியாக கமல்ஹாசன் 2வது மகள் அக்ஷரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.