காதலியை மணக்கிறார் நடிகர் மஹத்.. நட்சத்திர ஓட்டலில் நாளை திருமணம்..
கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகர் மஹத். இவர் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர். வல்லவன், காளை, வந்தா ராஜாவாத்தான் வருவேன் படங்களில் இணைந்து நடித்தார். அஜீத் நடித்த மங்காத்தா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது, இவன்தான் உத்தமன் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை மேக்வென் இயக்குகின்றனர். மஹத்துக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது.
தனது நீண்டநாள் காதலியான பிராய்சியை மணக்கிறார். இவர்களது திருமணம் நாளை (பிப்ரவரி 1ம் தேதி) காலையில் மகாபாலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. திருமணத்தையொட்டி கடந்த 2 நாட்களாக மெஹந்தி, சங்கீத் நிகழ்ச்சிகள் நடந்தன. குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர்.
காதலி பிராச்சி பற்றி மஹத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில்' என் வாழ்க்கையில் நீ காதலியாக வந்தபிறகு எல்லாவற்றையும் நல்லவையாக அமைத்தாய். நல்லவற்றை கற்றுக்கொண்டு இன்று கொண்டாடுகிறோம். நம் இருவரை பற்றியும் வளர்ந்தவர்களால் மட்டுமே நன்றாக புரிந்துகொள்ள முடியும். நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாகவும், அதிர்ஷ்டக்காரனாகவும் உணர்கிறேன். எதிர்காலத்தில் நமக்கு எல்லாமே நல்லதாக இருக்கும். ஐ லவ் யூ. உன்னுடையவனாக இருக்க நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்' என குறிப்பிட்டிருக்கிறார்.