காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு கல்யாணம்.. டிவிட்டரில் குழப்பம் செய்த நடிகர்..
ரஜினி முதல் அனைத்து நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்து தற்போது காமெடியில் கொடி கட்டி பறந்துகொண்டிருக்கிறார் யோகி பாபு. ஒரு நாளைக்கு பல லட்சம் சம்பளமாக வாங்குகிறார்.
யோகிபாபுக்கு திருமணம் என்று தகவல் வெளியானது. வரும் பிப்ரவரி 5ம் தேதி பார்கவி என்ற பெண்ணை யோகி பாபு திருமணம் செய்கிறார். திருத்தணி முருகன் கோவிலில் இவர்கள் திருமணம் நடக்கிறது. 'குடும்பத்தினர் பார்த்த பெண்தான். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். என் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்பவராக தேடினேன். அத்தகைய குணங்க ளுடன் பெண் கிடைத்துவிட்டார்' என யோகிபாபு கூறினார்.முன்னதான திருமண தகவலை யோகி பாபு மறுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் மெசேஜ் வெளியிட்டிருந்தார். பின்னர் அந்த பதிவை அவரே நீக்கிவிட்டார். திருமணம் நல்ல விஷயம்தானே அதை அறிவிப்பதில் இவருக்கு ஏன் இவ்வளவு குழப்பம் என்று ரசிகர்கள் கமென்ட் வெளியிட்டுள்ளனர்.