அஜீத் மீது பட அதிபர் தாக்கு.. ஹீரோவாக்கியவர்களை மறக்காதீர்கள்..
ஜிம்னாஸ்டிக் வீரர் கமல் கோவின்ராஜ் தயாரித்து நடித்துள்ள படம் புறநகர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன். "கதாநாயகியாக சுகன்யா, அஸ்வினி சந்திரசேகர் இருவரும் நடித்துள்ளனர். இந்திரஜித் இசை அமைக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
அதில் பட தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,' இது நம்ம ஏரியா படம். நான் வண்ணாரப்பேட்டை. படத்தில் குத்துப்பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது. இந்த ஹீரோ அர்னால்டு மாதிரி வந்திருப்ப. ஹீரோ கமல் கோவின்ராஜ் உயரத்துக்கு டான்ஸ் பண்றது கஷ்டம். ஆனால் சூப்பராக பண்ணிருக்கிறார். இயக்குநர் மின்னல் முருகன் அருமையாக படத்தை இயக்கி உள்ளார். ஹீரோக்கள் எவ்வளவு வேண்டும் ஆனாலும் என்று சம்பளம் வாங்கிக்கொள் ளுங்கள். ஆனால் அதில் பாதியை கஷ்டப்படும் மக்களுக்குச் செலவு செய்யுங்கள். அந்த மக்கள் தானே உங்களுக்கு பணம் தருகிறார்கள். உச்ச நடிகர்களில் இருந்து எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்.
ரஜினி முதலில் அறிமுகமானது சின்னப்படம்தான். அஜித்தும் அப்படித்தான். எங்கள் பாக்கியராஜும் அப்படிபடிப்படியாக ஏறித்தான் மேல் வருகிறார்கள். தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் தான் அஜித்தை ஹீரோவாக்கினார். ஆனால் அவர் கஷ்டப்படுகிறார். அஜித் இப்போது ஸ்ரீதேவி புருசன் (போனிகபூர்) கஷ்டப்படுகிறார் என்று படம் நடித்துக் கொண்டிருக்கிறார். உங்களை முதல்முதலில் ஹீரோவாக்கியவர்களை மறக்காதீர்கள். ரஜினிகாந்த் பாண்டியன் படத்தை அப்படித் தான் பண்ணிக் கொடுத்தார்' என்றார்.
நிகழ்ச்சியில் கே.பாக்யராஜ் பேசும்போது,"தயாரிப்பாளரும் ஹீரோவுமான கமல் கோவின்ராஜுக்கு வாழ்த்துகள். ரொம்ப பிரமாதமாக டான்ஸ் ஆடினார். நமக்கு எப்போதுமே டான்ஸ் வராது. ஸ்டண்ட் மாஸ்டர் படம் இயக்குவது ரொம்ப அரிது. ஆனால் மின்னல் முருகன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப்படத்தை பொறுத்தவரை சண்டைகள் ரொம்ப நல்லாருக்கும். டான்ஸுக்கு நல்ல இம்பார்ட்டெண்ட் கொடுத்து இந்திரஜித் இசை அமைத்துள்ளார். மக்களுக்கு கஷ்டம் இல்லாமல் பார்த்துக்கிற பொறுப்பு ஹீரோக்களுக்கும் உண்டு. ஏன் என்றால் மக்களிடம் டிக்கெட்டுக்கு அதிக பணம் வாங்கக் கூடாது என்று ஹீரோக்கள் சொல்ல வேண்டும் " என தெரிவித்தார்.