வரிசெலுத்துவோர் பட்டியலில் புதிதாக 16 லட்சம் பேர்.. நிர்மலா சீதாராமன் தகவல்..

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வரி செலுத்துவோர் பட்டியலில் 16 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர் என்று பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. மத்திய அரசின் 2020 -2021 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதில் அவர் கூறியதாவது:ஜி.எஸ்.டி அமலுக்கு வந்த பிறகு புதிதாக 16 லட்சம் பேர் வரி செலுத்துவோர் பட்டியலுக்கு வந்துள்ளனர். இந்தாண்டில் 40 கோடி ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 800 கோடி ஜிஎஸ்டி பில்கள் போடப்பட்டிருக்கின்றன. கடந்த 2014ம் ஆண்டில் மத்திய அரசின் கடன் 52.21 சதவீதமாக இருந்தது. தற்போது இது 48.7 சதவீதமாக குறைந்துள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாதிரி விவசாயச் சட்டங்களை மாநிலங்களும் நிறைவேற்ற வேண்டும். 15 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய மின்சார முனையத்தில் இருந்து பம்புசெட் இணைப்புகள் வழங்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

More News >>