ராஜேந்திரபாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் கோரிக்கை
வன்முறையை தூண்டும் வகையில் சட்டவிரோதியாக மாறி வரும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கவர்னர் பதவிநீக்கம் செய்ய வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, புதிய தலைமுறை டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு:நெஞ்சில் நஞ்சும்,வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, சட்டவிரோதி ஆகி வரும் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியான நடவடிக்கை தேவை!இவ்வாறு கூறியுள்ளார்.