அமைச்சர்கள் மனநல சிகிச்சைக்கு செல்ல வேண்டும் - டிடிவி தினகரன்
தமிழக அமைச்சர்கள் கீழ்ப்பாக்கம் செல்லும் அளவிற்கு தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர் என்றும் அவர்கள் 6 மாதம் மனநல சிகிச்சைக்கு செல்வது நல்லது என்றும் ஆர்.கே.நகர் தொகுதி சுயேட்சை உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “சென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது தவறானது. சமஸ்கிருதம், இந்தியை திணிக்க பாஜக முயற்சிக்கிறது.
தமிழகத்தில்தான் வெடிகுண்டு கலாசாரம் இல்லை; ஆனால் அதற்கு தூண்டுகிறது பாஜக. ஒருமையில் பேசி தமிழகத்தில் தவறான கலாச்சாரத்தை எச்.ராஜா உருவாக்குகிறா. இந்தியா முழுவதும் ஒரே மொழி என்ற நோக்கில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள்.
அரசியலுக்காக ஜெயலலிதா சிலையை அவசர, அவசரமாக வைத்துள்ளனர். அமைச்சர்கள் கீழ்ப்பாக்கம் செல்லும் அளவிற்கு தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர். அவர்கள் 6 மாதம் மனநல சிகிச்சைக்கு செல்வது நல்லது” என்று தெரிவித்துள்ளார்.