`கேப்டனாக என்னால் ஜொலிக்க முடியும் - புது கேப்டன் அஷ்வின் பன்ச்
இந்திய சுழற்பந்து வீச்சாளரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான வீரருமான ரவிச்சந்தர் அஷ்வினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இம்முறை ஏலத்தில் தட்டிச் சென்றது.
இந்நிலையில், சமீபத்தில் அஷ்வினை அணியின் கேப்டனாகத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பியது. ஆனால், இதற்குச் சற்றும் அதிர்ச்சியாகாமல் சாந்தமாக இருக்கிறார் அஷ்வின். இன்னும் சொல்லப்போனால், கேப்டன் பதவியை அவர் எதிர்பார்த்தே காத்திருந்துள்ளார்.
யாரும் எதிர்பாராத நேரத்தில், பஞ்சாப் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளீர்கள், அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டதற்கு, `பல ஆண்டுகளாக சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடியுள்ளதால், தற்போது கேப்டன் பதவி வந்துள்ளது சரியான முன்னேற்றம் என்றே கருதுகிறேன்.
ஒரு கேப்டனாக என்னால் ஜொலிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நம் நாட்டில் ஒரு பௌலர் கேப்டனாக இருப்பது சாதாரணமாது இல்லை என்பது தெரியும். எனவே, எனக்குக் கேப்டன் பதவி கொடுத்துள்ளது உற்சாகத்தைக் கொடுக்கிறது’ என்று நம்பிக்கை ததும்பக் கூறியுள்ளார்.