காமெடி நடிகர் யோகிபாபு ரகசிய திருமணம்.. குலதெய்வ கோவிலில் நடந்தது..
முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து இன்றைய ஹாட் காமெடியனாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் யோகிபாபு. இவரது திருமணம்பற்றி ரகசியம் பாதுகாத்து வந்தார். பலமுறை கிசுகிசு வந்தபோதும் அதை மறுத்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் மேல்நாகரம்பேடு பகுதியில் உள்ள குலதெய்வம் மாரியம்மன் கோவிலில் ரகசிய திருமணம் நடந்தது.
மணமகள் மஞ்சுபார்வகி கழுத்தில் தாலி கட்டினார் யோகிபாபு. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மணமக்களை வாழ்த்தினர். வரும் மார்ச் மாதம் சென்னையில் திருமண வரவேற்பு நடக்கும் என்று யோகிபாபு தெரிவித்திருக்கிறார்.
திருமணம்பற்றி பலமுறை மீடியாக்கள், பத்திரிகையாளர்கள் உறுதிபடுத்த அவரிடம் நேரில் கேட்டபோது அப்படியெதுவும் இல்லை என்று மறுத்த யோகிபாபு திடீரென்று ரகசிய திருமணம் செய்துகொண்டது திரையுலகினரையும், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.