சிங்கப்பூர் மியூசியத்தில் சிலையானார் காஜல்.. ஒரிஜனல் எது, டியூப்ளிகேட் எது?
உலக பிரசித்தி பெற்ற மேடம் துஸாட்ஸ் மியூசியம் பல்வேறு நாடுகளில் உள்ளது. சாதனையாளர்கள், பிரபலமானவர்களின் மெழுகு சிலைகள் இந்த மியூசியங்களில் இடம்பெற்றிருக்கிறது. சிங்கப்பூரில் உள்ள மியூசியத்தில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. காஜல் அகர்வாலே நேரில் சென்று சிலையை திறந்து வைத்தார். அதன் அருகில் நின்று சிலையைப்போலவே அவரும் போஸ் தந்தார். அவரும் ஆடாமல் அசையாமல் நின்றதால் உண்மையான காஜல் யார், மெழுகாக நிற்கும் காஜல் சிலை எது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் குழப்பம் ஏற்பட்டது.
அப்படங்கள் நெட்டில் வெளியானது. பிங்க் நிற உடை அணிந்திருப்பதுதான் நிஜ காஜல். சில்வர் நிறத்தில் சேலை அணிவிக்கப்பட்டிருப்பது காஜலின் மெழுகு சிலை. இந்நிகழ்ச்சியில் காஜலின் பெற்றோர், தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வால் கலந்துகொண்டனர்.
இதுபற்றி காஜல் அகர்வால் கூறும்போது,'என்னை நானே ஒரு கலைஞரின் விழியில் பார்க்கிறேன். எனக்கும் சிலைக்குமான ஒப்பீடு அபாரமானதாக உள்ளது. ஒரு சிறு பிசிறில்லாமல் அத்தனை நுண் விவரங்களுடன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தருணம் என் வாழ்வின் இன்றியமையாத பொன்னான தருணம். உலகின் மிக மிக பிரபலமான நபர்களின் சிலைகளுடன் எனது சிலையும் இடம்பெற்றிருப்பதில் மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன்' என்றார்.