மாஸ்டர் படப்பிடிப்பில் மீண்டும் விஜய்.. வருமான வரி துறை சோதனை முடிந்தது..
மாஸ்டர் படத்தின் 3வது கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடக்கிறது. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய், விஜய்சேதுபதி நடித்த காட்சிகள் படமாகின்றன. விஜய், விஜய்சேதுபதி மோதிக்கொள்ளும் சண்டை காட்சிகள் நேற்று முன்தினம் படமாக்கிக்கொண்டிருந்தபோது வருமான வரி துறையினர் சென்னையில் உள்ள விஜய் வீடு, அலுவலங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். பிகில் படத்துக்கு வந்த சம்பளம் மற்றும் வருமானத்தை முறைப்படி கணக்கில் காட்டவில்லை என வருமானத்துறை அதிகாரிகள். சோதனை மேற்கொண்டனர்.
பிகில் பட ஹீரோ விஜய், பட தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் , பைனான்ஸியர் அன்புச்செழியன் ஆகியோர் வீடு, அலுவலங் களில் சோதனை நடந்தது. இதில் அன்புச்செழியன் வீட்டில் 77 கோடி கைப்பற்ற பட்டதாதாக கூறப்படுகிறது. ஏஜிஎஸ் அலுவலகத்தில் முக்கிய தஸ்தாவேஜ்கள் கைப்பற்றப்பட்டது. விஜய் வீட்டில் ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரிக்க அதிகாரிகள் நெய்வேலி படப்பிடிப்பிலிருந்து விஜய் அழைத்து வரப்பட்டதால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சிறிது நேரம் பாதிக்கப்பட்டதாம், அதன்பிறகு தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதற்கிடையில் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி துறை சோதனை இன்று முடிவடைந்ததையடுத்து அவர் மாஸ்டர் படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்க நெய்வேலி புறப்பட்டு சென்றார். அங்கு படக்குழுவினரும், ரசிகர்களும் விஜய்க்கு பலத்த வரவேற்பு அளித்தனர்.