தலதீபாவளி கொண்டாட ரெடியாகிறார்.. இரண்டு நாட்களுக்கு முன்னதாக வெடி போடு..

அஜீத் படமோ, விஜய் படமோ  தீபாவளி தினத்தில் வெளியாகாவிட்டால் அவர்களது ரசிகர்கள் இந்த ஆண்டு எங்களுக்கு தீபாவளி கிடையாது என்று நெட்டில் பொங்கி எழுந்துவிடுகின்றனர். விஜய், அஜீத் நடித்த பழைய படங்களையாவது ரிலீஸ் செய்ய வைத்து அவற்றை தீபாவளி தினத்தன்று பார்க்கின்றனர். இம்முறை ரசிகர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு விருந்தாக வலிமை படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறார் தல அஜீத்.

நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் வலிமை படத்தை இயக்குகிறார். இது அஜீத்தின்  ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது.

வரும் நவம்பர் 14ம் தேதி தீபாவளி வருகிறது. அதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக அதாவது 12ம்தேதியே வலிமை படத்தை வெயளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது. தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தல ரசிகர்கள் பட்டாசு வெடிக்க தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.

More News >>