போர்ப்ஸ் சாதனை பட்டியலில் சாய்ப்பல்லவி.. அதிக சம்பாத்தியத்துக்கு ஆசை இல்லை..

போர்ப்ஸ் இதழ் போர்பஸ் 30 அன்டர் 30 பெயரில் 30 வயதில் சாதித்தவர்கள் என்ற புதிய பட்டியல் வெளியிட்டுள்ளது. பிரேமம் படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே பிரபலம் ஆனதுடன் இன்று முன்னணி கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்தது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். சாய் பல்லவி ஏற்கெனவே அழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்க 2 கோடி ரூபாய் சம்பளத்துடன் ஆபர் வந்தபோது அதை ஏற்க மறுத்துவிட்டார். சக நடிகைகள் விளம்பர படங்களில் ஓடி ஓடி நடிக்கும்போது 2 கோடி சம்பளத்தை சாய் பல்லவி வேண்டாம் என்று மறுத்தது அவர் மீதான மரியாதையை ரசிகர்களிடம் உயர்த்திக் காட்டியது.

"நான் தினமும் மூன்று சப்பாத்தி கொஞ்சம் சாதம் சாப்பிடுகிறேன் எனக்கு எதற்கு அவ்வளவு சம்பளம். நியாமான சம்பாத்தியமே போதும்" என்றார் சாய் பல்லவி.

More News >>