பாஜகவை எதிர்த்தால் இந்து இல்லையா? ஆர்.எஸ்.எஸ். தலைவர் விளக்கம்

பாஜகவை எதிர்ப்பவர்கள் எல்லாருமே இந்துக்கள் அல்ல என்று சொல்வது தவறு. இந்துக்களிலும் பாஜகவை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் சுரேஷ் ஜோஷி கூறியிருக்கிறார்.

கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் சுரேஷ் ஜோஷி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், பாஜகவை எதிர்ப்பவர்கள் எல்லோருமே இந்துக்கள் அல்ல என்று பேசப்படுகிறது. இது தவறானது. இந்து என்பது சமூகம். இதில் பாஜகவை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். அது அரசியல். எனவே, அரசியல்ரீதியாக பாஜகவை எதிர்ப்பதையும் தாண்டி. இந்துத்துவா கொள்கைகள் உள்ளன. எனவே, வெவ்வேறு அரசியல் கருத்துக்களையும் தாண்டி, இந்துக்கள் என்பதில் ஆர்.எஸ்.எஸ். கவனமாக இருக்கிறது என்று கூறினார். மகாராஷ்டிராவில் பாஜகவை எதிர்த்து சிவசேனா வெளியேறி, காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில், அந்த கட்சியை இந்துத்துவா கட்சி அல்ல என்று ஒதுக்குவதை ஆர்.எஸ்.எஸ் விரும்பவில்லை என்பதையே சுரேஷ் ஜோஷி பேச்சு வெளிப்படுத்துவதாக ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூறுகின்றனர். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றில் பாஜகவுக்கு மாற்று கருத்து உள்ள இந்துக்களை ஒதுக்குவதை ஆர்.எஸ்.எஸ் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

More News >>