காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மரணம்!
காஞ்சிபுரம் மடத் தலைவர் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்.
காஞ்சிபுரம் மடத்து தலைவர் ஜெயேந்திர சரஸ்வதி [வயது 83] மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், ஜெயேந்திரர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும், கடந்த 3 மாதங்களாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
ஜெயேந்திரர், 1935-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கியில் பிறந்தார். 1954-ம் ஆண்டு இளைய மடாதிபதியாக ஜெயேந்திரர் நியமிக்கப்பட்டார். காஞ்சிபுரம் மடத்தின் 69-வது தலைவராக 1994-ல் ஜெயேந்திரர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.