விஜய் நடித்த படத்தை பார்த்து ஹாலிவுட் படம் காப்பி.. ஆஸ்கர் விருது படத்துக்கு சிக்கல்?

ஹாலிவுட் படத்தையும், கொரியன் படத்தையும் பார்த்து தமிழ் பட இயக்குனர்கள் கதையை காப்பி அடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. தற்போது அப்படியே உல்டாவாக ஒரு புகார் எழுந்திருக்கிறது.

தமிழ் படத்தை பார்த்து ஹாலிவுட் படம் ஒன்று காப்பி அடிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. சமீபத்தில் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை பாராசைட் என்ற படம் வென்றது. இந்த படம் நடிகர் விஜய், ரம்பா ஜோடியாக நடித்த மின்சார கண்ணா படத்தை பார்த்து காப்பி அடித்ததாக கூறப்படுகிறது. 1999ம் ஆண்டு அப்படம் திரைக்கு வந்தது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கினார்.

மின்சார கண்ணா படத்தை பார்த்துத்தான், ஆஸ்கர் விருது வென்றிருக்கும் பாராசைட் படம் காப்பி அடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறதே. ஹாலிவுட் படம் மீது வழக்கு தொடர்வீர்களா என்றபோது, இந்த விஷயத்தை கேள்விப்படும்போது மின்சார கண்ணா பட குழுவினருக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததுபோல் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இப்படத்தின் உரிமை தேனப்பனிடம் உள்ளது. அவரால்தான் இதுபற்றி முடிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

இதுபற்றி தேனப்பன் தரப்பில் கூறும்போது,'வழக்கு தொடர வேண்டுமென்றால் அதற்கென பிரத்யேமாக வெளிநாட்டு வக்கீல் ஒருவரை நியமிக்க வேண்டும். இதுபற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும்' என்றார்.

More News >>