ஜங்கிள் புக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபுதேவா.. படத்திற்காக மொட்டை போட்டார்..

நடிகர் பிரபு தேவா நடிக்கும் புதிய படத்துக்கு பஹிரா என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இவர் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியவர். பஹிரா படத்தில் தலையை மொட்டையடித்து நடிக்கிறார் பிரபுதேவா.

படம்பற்றி இயக்குனர் கூறும்போது,'ஜங்கிள் புக் படத்தில் பஹிரா என்ற கதாபாத்திரம் பிரபலம். வழிகாட்டி, காப்பாளன் என்ற குணத்தோடு அழிக்கும்  குணமும் கொண்டதாக இந்த கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும். அதையொட்டித்தான் பிரபுதேவா கதாபாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இது பிரபுதேவா நடிக்கும் 55வது படம். காதல், நடனம் காமெடி என அவரை பல பரிமாணங்களில் பார்த்திக்கி றோம். ஆனால் தற்போது அவர் ஏற்கும் பாத்திரம் முற்றிலும் மாறுபட்டது. இதுவொரு மாயாஜால த்ரில்லர் படம். காதலும் உள்ளது' என்றார் இயக்குனர் ஆதிக்.

பஹிரா படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துவிட்டது. அமைரா தஸ்தூர் கதாநாயகி யாக நடிக்கிறார். சென்னை, கொச்சின், மும்பையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இம்மாத இறுதியில் இலங்கையில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

More News >>