காதலியுடன் விஷ்ணு கொண்டாட்டம்.. முத்தம் கொடுத்து குதுகலம்..
வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகமான விஷ்ணு விஷாலின் பட வெற்றி எப்போதாவது தலைகாட்டி வந்த நிலையில் எழில் இயக்கத்தில் நடித்து வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்துக்கு பிறகு வேகம் கூடியது. ராட்சசன் படம் அவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் காடான் படத்தில் ராணாவுடன் இணைந்து நடிக்கிறார் விஷ்ணு. இந்நிலையில் அவரின் காதல் விளையாட்டும் ஒரு பக்கம் வேகமெடுத்துக்கொண்டிருக்கிறது.
விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டாவுக்கும் விஷ்ணுவுக்கும் காதல் மலர்ந்திருப்பதாக அடிக்கடி தகவல் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அதை இருவருமே மறுக்கவில்லை மாறாக இருவரும் தங்களது இணைய தள பக்கங்களில் ஜோடியாக இருக்கும் படத்தை வெளியிட்டு வருகின்றனர். காதலர் தினமான நேற்று ஜூவாலா கட்டா விஷ்ணுவுடன் இருக்கும் படத்தையும் அவருக்கு கன்னத்தில் முத்தமிடும் படத்தையும் வெளியிட்டு, 'இது என்னடைய வேலன்டைன்' என மகிழ்ச்சி வெளிப்படுத்தியிருக்கிறார். விஷ்ணுவும் அதை லைக் செய்திருக்கிறார். காதல் ஜோடிகளாக உலா வரும் விஷ்ணு, ஜூவாலா ஜோடி சீக்கிரமே கல்யாண ஜோடியாக ஆகும் என்று கூறப்படுகிறது.
விஷ்ணு கடந்த 2018ஆம் ஆண்டு ரஜினி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக விஷ்ணு, ரஜினி இருவரும் விவகாரத்து பெற்று பிரந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.